- ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் போகும்வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டனர். அப்படியாக அவர்களுக்குப் பிறந்த முதன்
- சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024 சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை எதிர்வரும் மே 17, 2024 அன்று போளிவாக்கத்தில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரகுழு ஆச்சிரமத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று குருவின் சமாதி பூசைகள் நடைபெற்று சமாதி வழிபாடும் நடைபெறும். அங்கு அமைந்துள்ள சண்முகநாயகன் முருகன் ஆலயத்திலும் சிறப்பு பூசைகள் நடைபெறும். அன்று உபதேசம் வழங்கப்படும். விரும்புபவர்கள் உபதேசம் எடுத்துக் கொள்ளலாம். அன்று முழுவதும் அன்னதானம்
- குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் உலகத்துக்காகக் கூறிய தத்துவங்கள்
தொகுப்பு M.S.வித்தியபதி (DME) வேலூர் மாவட்டம் ‘ஆம்பூர்’ M.S.வித்தியபதி (DME)S/O R.சம்பத்பக்கலப்பள்ளி, சின்ன தாமல் செருவுPost பேரணம்பட்டு, வேலூர் மாவட்டம்Pin : 635810
- சமாதி நிலை – குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா
குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா ஆங்கிலத் திகதி 17 மே 2023, தமிழ்த் திகதி வைகாசி மாதம் மூன்றாம் திகதி அன்று பிரதோசமும், மாத சிவராத்திரியும் கூடிய பிரம்ம முகூர்த்தத்தில், தேய்பிறைத் துவாதசி திதியில் அதிகாலை மூன்று மணியளவில் சமாதிநிலை அடைந்தார். சிவனை வழிபடுவதற்குரிய சிறந்த விரதங்களுள் பிரதோச விரதமும் ஒன்றாகும். பிரதோச வழிபாடு என்பது பாவங்களை தொலைத்து மோட்சத்தை அடைய வழிவகுக்கும் அன்று மாலை மூன்று மணி முதல் குருவுக்கு இறுதி அஞ்சலி
- எனது ஆன்மீகப் பயணம் 2023
இவ்வருடமும் அதாவது 2023 குருவை ஒருமுறை நேரில் சென்று தரிசித்து அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இவ்வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் குடும்பத்தினருடன் சென்று ஆசீர்வாதம் பெற்று வரலாம் என்று எண்ணி இருந்தேன். பெப்ரவரி மாதத்தில் குரு சற்று உடல்நலம் குன்றி இருப்பதாக அறிந்து அவரை உடனேயே சென்று பார்க்க விரும்பினேன். இம்முறையும் திட்டமிட்டது போல குடும்பத்தினருடன் சென்று வர முடியவில்லை. தனியாகவே ஏப்ரல் மாத பௌர்ணமி பூசைகளில் கலந்து
- முக்திதரும் ஏழு புனிதத் தலங்கள்
இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவில் ஏழு புனிதத் தலங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் முக்தி தரும் தலங்களாகும். இந்த ஏழு புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு தலத்தில் தரிசித்து அங்குள்ள புனித நீரில் நீராடினால் எமக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். முக்திதரும் புனிதத் தலங்கள் வருமாறு: காசி விஸ்வநாதர் கோயில் வாரணாசி இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கைக் கரையில் அமைந்த புனித நகரமாகும்.. முக்தி தரும் ஏழு நகரங்களில்
- புதிய தியான மண்டபம் – திறப்பு விழா – பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது பிரம்ம சூத்திர குழு போளிவாக்கம் ஆச்சிரமத்தில் ஒரே சமயத்தில் 3000 சீடர்களும் தொண்டர்களும் அமர்ந்து இருந்து சுவாமிகளுடன் கேள்வி பதில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக மிகவும் பிரமாண்டமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த தியான மண்டபம் 05 தை 2023 அன்று சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள முருகன் ஆலய முன்றலில் 300 பேர் அளவிலே அமர்ந்து இருக்கக்கூடிய சிறிய மண்டபத்திலேயே கேள்வி பதில் நிகழ்வுகள்
- ஆன்மா
வேதங்கள் உபநிடதங்கள் என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள ஆதியான நூல்களில் சிலவாகும். சில வேதங்கள் எழுதப்பட்ட காலங்களும் யாரால் எழுதப்பட்டவை என்ற விபரங்களும் அறிய முயாமலுள்ளது. அப்படியான ஒரு உபநிடதத்தில் இருந்து மரணம் வரை சென்று யமனுடன் உரையாடி ஆன்மாவின் தத்துவத்தினை விளக்குவதாக அமைந்துள்ளது இந்த கடோபநிஷதம். அதில்க் கூறப்பட்ட தத்துவ உண்மைகள் ஞானப் பாதையில் செல்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். என்பது எனது எண்ணமாகும். எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது போதனைகளில் இருந்து நான்
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி கோபுர கும்பாபிஷேகம் 2022
பிராம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி பூசையும் ராஜயோக உபதேசங்களும் (தீட்சைகளும்) 16/04/2022 மற்றும் 17/04/2022 ஆகிய நாட்களில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20/04/2022 மற்றும் 21/04/2022 ஆகிய நாட்களில் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதிக்கு மேலாக எழுப்பப்பட்டுள்ள கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த இரு நிகழ்வுகளில் நடைபெற்ற வைபவங்களின் காணொளிகளை இங்கு இணைத்துளோம். ***** சித்தர்கள் மகான்களை ஏன் நாம் வணங்க வேண்டும். பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது
- சித்திராப் பௌர்ணமி (பூரணை)
சித்திரை மாதத்தில் முதலாவதாக வரும் பௌர்ணமி தினமே உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திராப் பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சித்தர்கள், ஞானிகளை வணங்கி, அவர்களை நினைவு கூர்ந்து அவர்களது ஆசீர்வாதம் பெறும் நாளாகும். பகல் முழுவதும் விரதமிருந்து பூசை செய்து நடு நிசியில் சந்திரனை கண்டு தரிசித்து விரதத்தினை நிறைவு செய்வர். தமது தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் தாயை நினைத்து விரதம் அனுட்டித்து புனித நீர் நிலைகளில்
- கேள்வி பதில் பகுதி 7 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா மெய்ப்பொருள் என்றால் என்ன? அதனை எப்படி அறிந்து கொள்வது? குரு: கண்களுக்குத் தெரிவதெல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதாவது எமது இந்த உடல், நாம் கண்களால்க் காணும் காட்சிகள் எல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறுகின்றோம். ஆனால் ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், நாம் காணும் இந்தத் தோற்றம் எல்லாம் பொய் என்று கூறுகிறார்கள். ஞானிகள் கூறுவது சரியா அல்லது நாம் கூறுவது சரியா என்று பார்த்தால் ஞானி சொல்வதுதான் சரியானது.
- பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் ஆலய மகா கும்பாபிஷேகம்.
எதிர்வரும் சித்திரை மாதம் 08 ஆம் நாள் 21 -04 -2022 வியாழக் கிழமை போளிவாக்கம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள அருள்முகு ஸ்ரீ சண்முகநாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய மகா கும்பாபிஷேகம். நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரம்ம சூத்திர குழு விழாக் குழுவினர். 29 /10 /2019 அன்று பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி மற்றும் சிலை திறப்பு விழாவின்போது சுவாமிகள் மற்றும் அவரது சில சீடர்கள் ஆற்றிய உரைகள்.
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள் “குருவே போற்றி” “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சாமியே போற்றி” “இல்லறத்தில் வாழும் சித்தரே போற்றி” “இல்லற சித்தரே போற்றி போற்றி” 2024 சித்திரை மாதம் 29ஆம் திகதியன்று 77 ஆவது அகவை காணும் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குருவின் ஆன்மீக சிந்தனைகள் உலகெங்கும் பரவி எல்லோரும் இன்புற்று வாழ எமது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். உலகெங்கிலும் பரந்து வாழும் அனைத்து பக்தர்கள் சீடர்களுடனும் இணைந்து
- பிறப்பு – இறப்பு – முக்தி
“இறப்பு என்பது சூல தூல உடலின் அழிவாகும். முக்தி என்பது சூக்கும உடலின் அழிவாகும்.” முதலில் நாம் சூல உடல் சூக்கும உடல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். தூல உடல் (சூல உடல், அன்னமய கோசம்) ஒவ்வொரு ஜீவ ராசியும் இவ்வுலகத்தில் எடுத்திருக்கும் உடலே சூல உடலாகும். இந்தச் சூல உடல் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களினால் ஆனது. மரமானாலும் சரி, புளுவானாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி
- காயத்திரி மந்திரம் (சாவித்ரி மந்திரம்)
காயத்திரி மந்திரம் “ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.” மந்திரம் மனதை திடப்படுத்துவது, காப்பது மந்திரம் ஆகும். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒரு ஆற்றலை இன்னொரு ஆற்றலாக மாற்றுவதும் மந்திரங்களாகும். சக்தி குறித்த விஞ்ஞானத்தின் விதி என்னவென்றால் ஒரு சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், அதற்குச் சமமான வேறொரு சக்தியாக (ஆற்றலாக) மாற்ற முடியும் என்பதே விதியாகும். உதாரணமாக சூட்டடுப்பில் மின்சார சக்தியை கம்பிச் சுருளினூடாகச் செலுத்தும்போது
- கேள்வி பதில் பகுதி 6 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா எமது தாய் தந்தையரை நாம் எப்படிப் பேணவேண்டும் குரு: உன்னை இந்த உலகத்துக்கு வர வைத்தவர்கள் உனது தாயாரும் தந்தையாரும். அவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்தப் பூமிக்கு வந்திருக்க முடியாது. அவர்களே இந்த வாழ்கையையை உனக்குக் கொடுத்தவர்கள். அவர்கள் மூலமாகவே நீ இந்த உலகத்துக்கு அடையாளப் படுத்தப்பட்டாய். அவர்களை மறக்க முடியுமோ. எவனொருவன் தன் தாய் தந்தையரை மதிக்க மாட்டானோ அவன் கடவுளையும் மதிக்க மாட்டான். எவனுடைய மனம் அவனது தாய் தந்தாயாரை தெய்வமாக
- குரு போற்றி (குரு மந்திரம்) பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
எமது குருவை வணங்க இரண்டு குரு போற்றிகள் பாடப்பட்டுள்ளன அவையாவன “குரு போற்றி” மற்றும் “மலேசிய குரு போற்றி” ஆகும். இங்கு இரண்டு குரு போற்றிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு குரு போற்றிகளும் குருவையே போற்றி எழுதப் பட்டுள்ளன. இங்கு முதலாவது முதலானதாகும். அடுத்த குரு போற்றி மலேசிய ஆச்சிரமம் திறக்கும் போது எழுதப்பட்டது. குரு போற்றி எனப்படுவது சீடர்களால் குருவை வணங்கிப் பாராயணம் செய்யப்படும் போற்றியாகும். தினமும் குருபூசை செய்யப்படும் போது அல்லது எமக்கு வாழ்வில் துன்பங்கள்,
- ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6
ஒளவையார் குறள் ஒளவையார் எழுதிய விநாயகர் அகவல் மற்றும் ஞானக்குறள் ஆகியவை ஞான நூல்கள் எனப்படுகின்றன. அதாவது ஒருவன் முக்தி அடைய பின்பற்றவேண்டிய யோக வழிமுறைகள் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒளவையின் குறளாகிய ஞாக்குறளை திருமூலரின் திருமந்திரத்தின் சுருக்கம் எனக் கூறுவர். திருக்குறளைப் போலவே இந்த நூலும் இரு வரிகள் கொண்ட குறள் வடிவில் எழுதப்பட்டுள்ளது. வீட்டுனெறிப்பால், திருவருட்பால், தன்பால் என மூன்று பகுதிகளாகப் (பால்களாகப்) பிரிக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்கள் கொண்ட 31 அதிகாரங்கள் இதில் உள்ளன.
- ஒளவையார் மூதுரை – பகுதி 5
ஒளவையார் அருளிச்செய்த மூதுரை. மூதுரை என்பது மூத்தோர் மூதாதையர்களது அறிவுரை எனப்படும். ஔவையார் இயற்றிய ஒரு நீதி நூல். வாழ்கைக்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. பாடல்களைக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்து வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்நோக்கு உண்டாம் மேனிநுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு விளக்கம்: தும்பிக்கையுள்ள விநாயகப் பெருமானது திருவடிகளைத் தினமும் பூச்சூடி வணங்கி வருபவர்களுக்கு சிறந்த
- ஒளவையார் நல்வழி – பகுதி 4
ஒளவையார் அருளிச்செய்த நல்வழி நல்வழி என்பது மக்கள் தம் வாழ்வில்க் கடைப்பிடிக்க வேண்டிய நற்கருத்துக்களையும், சிறந்த தத்துவங்களையும், சமயக் கோட்பாடுகளையும் கூறுவனவாக அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா. விளக்கம்: தும்பிக்கையுடைய விநாயகப் பெருமானே தினமும் பாலும், தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பருப்பும் படைத்து நான் உன்னை வணங்குவேன் எனக்கு நீ முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களாலும்
- ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3
கொன்றை வேந்தனில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன. சிறியவர் முதல் பெரியவர் வரை என்றென்றும் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் ஒரு வரியில் கூறப்பட்டுள்ளன. “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” கொன்றைப் பூ மாலையை அணிந்த சிவபெருமானின் புதல்வனாகிய முருகப் பெருமானை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – தாயும் தந்தையும் நாம் அறியும் முதல்த் தெய்வங்கள். 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
- ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2
ஒளவையார் அருளிய ஆத்திசூடி சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் இலகுவாக நிறுத்திக் கொள்ளும் வகையில் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை ஒரு வரியில் கூறப்பட்டுள்ளது. ஆத்தி மலர் சூடிய இறைவனைப் போற்றி இறைவனின் அருள் வேண்டி எழுதப் பட்டுள்ளது. கடவுள்வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே விளக்கம்: ஆத்தி-ஆத்திப் பூ மலையை; சூடி- சூடியிருக்கும் சிவனுடைய; அமர்ந்த- மனதில் அமர்ந்த (அன்பிற்குரிய) தேவனை- விநாயகக் கடவுளை; ஏத்தி ஏத்தி- எப்பொழுதும்
- ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம். ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்பது, தமிழ்ப் பெண்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இது ஆண்கள் இல்லாமல் பெண்களால் மட்டுமே இரவு வேளையில் நடத்தப்படும் ஒளவையார் வழிபாடாகும். இந்த வழிபாட்டு முறை செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும், பாட்டி வழிபாடு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றது. இந்த வழிபாட்டு முறை பொதுவாக தை, மாசி, ஆடி மாதங்களில், தொடர்ந்து மூன்று செவ்வாய்க் கிழமைகளில்
- ஒளவையார் வரலாறு
ஒளவையார் மக்களுக்கு பல சிறந்த கருத்துக்களைக் கூறிய சில தெய்வப் புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர். ஒளவையார் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி பல அறிவுப் பொக்கிஷங்களை மக்களுக்காக அருளியவர். இவர் தமிழும் சைவமும் வளர்த்த தமிழ்ப் புலவர்களில் முதன்மையானவர் எனப் போற்றப்படுகிறார். தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றுவதன் பொருட்டு தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கியத்தை உயர்ந்த இடத்திற்கு எட்டச் செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் ஒளவைப் பிராட்டி என்பது தமிழ்கூறு
- தலைவிதியும் (ஊழ்வினை) பரிகாரமும்
ஊழ்வினை என்றால் தலை எழுத்து அல்லது கருமா அல்லது தலைவிதி என்று அர்த்தமாகும். இதனையே வினைப்பயன் அல்லது கர்மவினை எனவும் ஆன்மீகவாதிகள் அழைப்பர். ஆங்கிலத்தில் இது ‘Fate’ எனப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும் நல்ல செயல், தீய செயல் எல்லாமே நம்மிடத்தில் பதிந்து காலம் வரும்பொழுது அதற்கேற்ற பாவ, புண்ணிய பலன்களை அனுபவிப்பது தான் ஊழ்வினை எனப்படும். கர்மாவை நாம் அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். அதை அனுபவிக்காமல் நம் பிறவி முழுமை அடையாது. ஒரு பிறவியில் அந்தப் பாவபுண்ணியங்கள்
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்
கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையில் கண்ணகி வழிபாட்டில் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி அம்மனை வழிபடுகின்றனர். கண்ணகி மதுரையை
- திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள ஐந்து பெரிய புராதன சிவாலயங்களில் அதாவது ஈஸ்வரங்களில். (ஈச்சரங்களில்) இதுவும் ஒன்றாகும். ஐந்து ஈஸ்வரங்கள். (ஈச்சரங்கள்) 1. நகுலேச்சரம்: யாழ்ப்பாணத்திலுள்ள தலயாத்திரைக்குப் பிரசித்தமான தலமாக விலங்குக்குறது. இத் திருத்தலம் கீரிமலைச் சிவன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. 2. திருக்கோணேச்சரம்: இலங்கையின் கிழக்கு
- புத்தக வெளியீடுகள் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை
ஆச்சிரம புத்தக வெளியீடுகள் வெளியீடு 1: சரம்பார்த்தால் பரம் பார்க்கலாம். யோகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீக அனுபவங்கள் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் அடங்கியுள்ளது. சரம் என்றால் மூச்சு பரம் என்றால் இறைவன். எமது மூச்சைக் கவனிக்க ஆரம்பிக்கும்போது அது மனத்தைக் கட்டுப்படுத்தி உள்முகமான தேடலுக்கு வழிவகுக்கும் வழிமுறைகளை விளக்குகிறது. பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளின் அறிவுரைகள் மற்றும் விளக்கங்களில் இருந்து அவரது சீடர் வேலாயுதம் அவர்களால் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. Language: Tamil
- கேள்வி பதில் பகுதி 5 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: எமக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது இன்னும் எமக்குப் பிள்ளை வரம் இல்லை அது எமக்கு கிடைத்த சாபமா சுவாமி? வரம் என்றால் என்ன சாபம் என்றால் என்ன ஐயா? குரு: வரம் என்றால் நன்மை. சாபம் என்றால்த் தீமை. வரம் என்றால் பிறர் உன்னை வாழ்த்துவது. சாபம் என்றால் பிறர் உன்னைத் திட்டுவது. வரமும் வாழ்க்கைக்கு உதவும். சாபமும் வாழ்க்கைக்கு உதவும். குழந்தை இல்லை, மனைவி கணவனுடன் வாழ முடியவில்லை, கணவன் மனைவியுடன் வாழ
- தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)
தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தியானம் என்றால் சிந்தனைகள் அற்ற நிலை என்று அர்த்தம். தியானம் என்பது ஏதோ ஒரு பொருளை எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். எமது உடல் பொருள் ஆவி (ஆன்மா) மூன்றையும் அதாவது எம்மையே கடவுளுக்குத் தானமாகக் கொடுப்பதுதான் தியானம். அது யோகப் பயிற்சியின் மூலமாகவே
- கேள்வி பதில் பகுதி 4 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: சீடனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ஐயா? குரு: ஒரு குருவை நம்பி அவரிடம் செல்பவன்தான் அவருக்குச் சீடராகிறான். சீடனானவன் நல்ல குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளவேண்டும். குரு சொன்னபடி கேட்டு நடக்க வேண்டும். குருவிடம் இருந்து கற்ர பாடங்களை முறைப்படி தினமும் தொடர்ந்து பய பக்தியோடு பயிற்சி செய்து வரவேண்டும். அவனுக்குப் பக்குவம் வரும்போது அவன் செய்யும் பாடத்தின் பலனை அவன் அனுபவிப்பான். உதாரணமாக ஒவ்வொரு மரமும் பூத்துக் காய்ப்பதற்கு ஒவ்வொரு
- திருமூலர் அருளிய அட்டாங்க யோகம்
அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப் பயிற்சி முறைகளை எட்டுப் படிமுறைகளாக வகுத்து அதனை அட்டாங்க யோகம் எனப் பெயரிட்டுள்ளார். அட்டாங்க யோகம் (மூன்றாம் தந்திரம் ) “இயம நியமமே எண்ணிலா ஆதனம்நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்சயமிகு தாரணை தியானஞ் சமாதிஅயமுறும் அட்டாங்க மாவது மாமே.” – திருமந்திரம்.
- திருமூலர் வரலாறு
திருமூலர் திருமந்திரம் திருமந்திரம் என்ற ஞான நூலினை எமக்களித்த திருமூலர் வரலாறும் திருமந்திரம் என்ற ஞானநூலின் தோற்றமும். திருக்கயிலையில் திருநந்தி தேவரின் முதன்மை மாணாக்கரில் ஒருவரான “சுந்தரனார்” எனும் பெயருடைய ஒரு சிவயோகியார் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்திய மாமுனிவருக்கு அடுத்தவராக இவரே போற்றப்படுகிறார். நந்தி தேவரின் முதன் மாணாக்கரில் ஒருவராவார். சிவனிடமிருந்து வேத ஆகமங்களை அறிந்து அவற்றை தமது மாணாக்கர்களுக்கு நந்தி தேவர் அருளினார். கயிலையில் நந்தி தேவரிடமிருந்து
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு
ஆத்ம வணக்கம். பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைக்கும் இடம் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம். சீனிவாசன்: (91) 7904189707 தியாகு: (91) 8825454432 ஜீவானந்தம்: (91) 8122279790 பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதிய சீடன் சிவகுமாரன் பிரான்ஸ் இல் இருந்து ஒலிபரப்பாகும் ITR சர்வதேச தமிழ் வானொலி அதிபர் திரு செல்வா அவர்களுடனான கலந்துடையாடல். பின்வரும் லிங்க் (link) இல்
- யோகம் – யோகப் பயிற்சி
பொதுவாக எமது மனதில் தோன்றும் கேள்விகளான யோகம் அல்லது யோகக் கலை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? வாசி யோகம் என்றால் என்ன? குண்டலினி யோகம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய நான் அறிந்து கொண்ட விளக்கங்களைப் பார்க்கலாம் மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இவை நாற்பாதங்கள்
- கேள்வி பதில் பகுதி 3 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா சித்தாந்தம், வேதாந்தம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்? குரு: சித்தம் என்றால் அறிவு என்று அர்த்தம். சித்தாந்தம் என்பது ஆன்மீக. அறிவு சார்ந்தது. உன் அறிவினால் உனக்குள் இருக்கும் உனது ஆற்றல் உனது ஆன்மா ஆகியவற்றை அறிவதே சித்தாந்தம். வேதாந்தம் என்பது வெளி உலகம் சம்பந்தப்பட்டது புத்தகத்தை சார்ந்தது.வேதாந்தம் என்பது வெளி உலகத்தைப் பார்ப்பது, படிப்பது கடவுளைப் பற்றிப் படிப்பது அறிந்து கொள்வது பக்தி செய்வது வேதாந்தம் எனப்படும். கேள்வி: குரு செத்தால் மோட்சம்
- குண்டலினி என்றால் என்ன?
யோகப் பயிற்சியின்போது ஆதாரங்கள், நாடிகள் மற்றும் குண்டலினி பற்றிய விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த விளக்கங்கள் தெளிவில்லாமல் இருக்கும்போது எம்மை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்த முடியாமலிருக்கும். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளிடமிருந்து நான் அறிந்துகொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். முதலில் உடலில் உள்ள ஆதாரங்கள் அதாவது சக்கரங்கள் பற்றிய சிறு விளக்கத்தினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஆணும் பெண்ணும் இணைவதனால், ஆண்மூலம் உயிரும் பெண்மூலம் கருவும் இணைந்து உடல் உருவாகிறது. இது
- சிந்தனைகள்
எதிர் மறையான சிந்தனைகள் (Negative Thinking) எண்ணங்கள் சிந்தனைகள் மூலமாகவே எமது அன்றாட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஓடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே. இங்கு உலகம் என்று குறிப்பிடுவது நாம் வாழும் இப் புவியில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே, சிந்தனைகளே. இன்னும் சிறிது ஆழமாக நோக்கும்போது இவ்வுலகில் சிந்திக்கும் ஆற்றல் சிந்தித்து செயலாற்றும் தன்மை மனித குலத்துக்கு மட்டுமே உண்டு. எனவே மனித குலத்தின் சிந்தனைகளாலேயே இவ்வுலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் நகர்ந்து
- ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை. பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா
- உடல் உயிர் ஆன்மா
நாம் ஆன்மீக நாட்டம்கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன். எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளது கேள்வி பதில்களையும் மேலும் பல தேடல்களில் இருந்தும் நான் அறிந்து கொண்ட உணர்ந்து கொண்ட புரிந்து கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். முதலில் உடல் என்றால் என்ன என்பதனை
- கேள்வி பதில் பகுதி 2 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா இறைவனை அடைய சாமி வேடம் தேவையா? குருவின் விளக்கம்: உலகத்தில் இறைவன் ஒருவனே. ஒவ்வொரு மதங்களிலும் பிற மதங்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தனித்துவமான ஆடைகள் அணிகலன்கள் அணியப்படுகின்றது. கடவுளுக்கும் இந்த வேடங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. கடவுள் என்பவன் உனக்குள்ளேயே அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குடிகொண்டிருக்கும் ஒளிவடிவானவன். அவனுக்கு எந்தவிதமான அடையாளங்களோ அல்லது சாதி, இன, மத, மொழி பேதங்களோ கிடையாது. ஒரு குரு மூலமாக யோகம் கற்று யோகத்தின் மூலமாக
- பாவத்தைப் போக்குவது எப்படி
பாவம் வேறு, சாபம் வேறாகும். பாவம் என்பது ஒருவர் ஒரு காரியத்தை அறிந்தோ அல்லது அறியாமலோ தவறுதலாகச் செய்யும்போது அதனால் ஏற்படும் விளைவுகளால் வரும் பாதிப்புக்களே பாவமாகும். உதாரணமாக ஒரு பாவமும் செய்யாத ஒரு பாம்பு புற்றில் இருந்து வெளிவரும்போது அதனைக் கண்ட நாம் பயத்தில் கம்பு எடுத்து அதனை அடிக்கப் போகிறோம். அதனால் அது பயத்தில் எம்மைக் கடிக்கிறது. அதாவது ஒன்றுமே அறியாத அப்பாம்பைக் கண்டு பயந்து நாம் அடிக்கப்போக (நாம் பாவம் செய்கிறோம்) அதன்
- பக்தியும் ஆன்மீகமும்
பக்திக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது கேள்வி பதில் மற்றும் விளக்கங்களில் இருந்து நான் அறிந்து உணர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பக்தி மார்க்கம் என்பது இறைவன்மேல் அன்புவைத்து எம் எண்ணங்களை வெளிமுகமாகச் செலுத்தி அவரவர் சார்ந்துள்ள மதக் கோட்பாடுகளுக்கு ஏற்ரவாறு சிலை வழிபாட்டை மத வழிபாட்டை, மத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுவது. இதுவே பக்தி வழிபாடு என அழைக்கப்படும். சித்தர்கள் பார்வையில்
- கேள்வி பதில் பகுதி 1 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா புத்தகங்கள் படித்து அல்லது கம்புயூட்டர் மூலமாக அல்லது வீடியோ மூலமாக அறிந்து யோகம் செய்யலாமா? குருவின் விளக்கம்: இல்லை யோகம் அப்படிச் செய்யக்கூடாது யோகம் என்பது உயிரோடு சம்பந்தப்பட்டது. நீ எதிர்பாராத விளைவுகளை உனக்கு ஏற்படுத்திவிடும். எனவே யோகம் என்பது ஒரு உண்மையான குருவிடமிருந்து முறைப்படி கற்று. அவர் கூறுவதுபோல பின்பற்றிச் செய்யவேண்டும். இதுவே யோகம் செய்ய சிறந்த முறையாகும். கேள்வி: ஐயா வேதங்களை ஓதுவது இறைவனை அடைய வழி வகுக்குமா? குருவின் விளக்கம்:
- பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
இந்தியாவின் தமிழ்நாட்டிலே, சென்னையிலே திரு, திருமதி பெருமாள் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் திகதி ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும். இவரது தாய் தந்தையர் இவரது ஐந்தாவது வயதில் கருத்து வேறுபாட்டினால் தனித்தனியே பிரிந்து சென்ற பொழுது இவரது சகோதரர்களைத் தாயார் தன்னுடன் அழைத்துச் செல்ல, தந்தையார் திருவள்ளூர் மாவட்டத்திலே உள்ள நல்லாத்தூர் என்ற கிராமத்திலுள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு இவரைத் தன்னுடன்