- ஆடி அமாவாசை July 24 2025
இந்த ஆண்டு ஆடி அமாவாசை July 24 2025 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை” எனச் சிறப்புப் பெறுகின்றது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும்போது அமாவாசை (இருள்) உண்டாகும். பொதுவாக ஒரு மாதத்தில் ஒரே திதி இரண்டு தடவை வரும்போது இரண்டாவது திதியே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்துக்களால் தமது இறந்துபோன உறவினர்களை அனுஷ்டித்து, நினைவுகூர்ந்து,
- தைப்பொங்கல் 15-01-2023
தைப்பொங்கல் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் நெல் அறுவடைப் பண்டிகை ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் முதல் மாதமான தைமாதத்தில் வருகின்ற முதலாம் நாள் தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது. இவ்வருடம் தைப்பொங்கல் 15-01-2023 அன்று கொண்டாடப் படுகிறது உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், தமது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த உயிர்களுக்கும் (ஆடு, மாடு, எருமை, கழுதை) கூறும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக விளைந்த
- கந்தர் கவசங்கள் (ஆறு கவசங்கள்) ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளியவை
கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்பதும் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவரது பூர்வீகம் அறிய முடியவில்லை. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தர் கவசங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப் படுகின்றன. ஆனாலும் இப்போது
- கந்தர் சஷ்டி கவசம் (கந்தர் கவசம்) மூலமும் விளக்கமும்
கந்த சஷ்டி கவசம் என்பது பாலன் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பாடலாகும். இக் கவசத்தினை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதும் 16 ஆம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்தார் என்பதும் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவரது பூர்வீகம் அறிய முடியவில்லை. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தர் கவசங்களை இயற்றியுள்ளார். அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப் படுகின்றன. ஆனாலும் இப்போது
- திருவெம்பாவை (18-12-2023 to 27-12-2023
திருவெம்பாவை பூஜை. 18-12-2023 (திங்கள்) ஆரம்பம். 27/12/2023 (புதன்) பூர்த்தி. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும் திருவெம்பாவை உற்சவ காலங்களாகும். திருவாதிரைநட்சத்திர தினத்தன்று திருவெம்பாவை நிறைவு பெறுகின்றது. திருவெம்பாவை நடராஜப் பெருமானுக்கு உரித்தான உற்சவம். மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது திருவெம்பாவை நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் “மார்கழி நோன்பு” என்றும், கன்னிப் பெண்களாலும், “பாவை” அமைத்து நோற்கப்படுவதாலும் “பாவை நோன்பு” எனவும் அழைக்கப்பெறுகின்றது. கார்த்யாயனி விரதம் எனவும் அழைக்கப்படும் திருவெம்பாவை
- பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (15-12-2024 to 04-01-2025)
பிள்ளையார் பெருங்கதை 15-12-2024 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பம். 04-01-2025 சனிக் கிழமை பூர்த்தி. இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதமானது பிள்ளையார் பெருங்கதை விரதம், விநாயக சஷ்டி விரதம், பிள்ளையார் கதை விரதம், பிள்ளையார் நோன்பு எனப் பல பெயர்களால் வழங்கப்படும். இது விநாயக விரதங்களில் மிகச் சிறப்பான விரதமாகும்.
- கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (14-12-2024)
2024 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இதனை சர்வாலய தீபம் எனவும் அழைப்பர் திருக்கார்த்திகை தினத்தன்று மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களில் சுட்டிகளில் தீபமேற்றியும் வீட்டு
- தீபாவளி October 31/ 2024
2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர், 31 ஆம் திகதி அன்று கொண்டாடப்படுகிறது தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலகெங்கிலும் பரந்து வாழும் இந்துக்களால்க் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை பெரும்பாலும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளித் தினத்தன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து, கழுவி மெழுகி வீட்டைத் தூய்மைப் படுத்தி அலங்கரித்து,
- கந்த சஷ்டி விரதம் (Nov 22/2025 to Nov 27/2025)
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது பொருளாகும். கந்தசஷ்டி விரதம், ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சஷ்டி என்றால்
- கேதார கௌரி விரதம் (01/10/2025 to 20/10/25)
இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்ளைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும். சிவனுக்குரிய சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும். இவ்விரதம் அம்மன் மற்றும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 21 நாட்கள் அமைந்த பிள்ளையார்கதை விரதம் போல பெண்களுக்கு
- நவராத்திரி விரதம் (22/09/2025 to 01/10/2025)
நவராத்திரி விரதம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 01 ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 9 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகும். இருந்தும் வருடத்தில் நான்கு
- விநாயகர் ஆவணிச் சதுர்த்தி – 06 Sep 2024
விநாயகர் ஆவணிச் சதுர்த்தி (06 Sep 2024 வெள்ளிக்கிழமை) தேவாரம் திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறை பிடியத னுருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடிகண பதிவர வருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. விளக்கம்: உமையவள் பெண்யானை வடிவுகொண்டு நந்தவனத்தில் இன்பமாக இருந்த நேரம் சிவன் தானும் ஆண்யானையின் வடிவு கொண்டு உமையவளோடு இன்புற்றிருந்தபோது தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைய கணபதியைத் தோற்றுவித்தருளினான். ஆவணிச் சதுர்த்தி (ஆவணி மாதம் வளர்பிறை 4ம் நாள்) இந்து
- ஸ்ரீ வரலட்சுமி விரதம் 05-08-2022
வரலட்சுமி நோன்பு (விரதம்) 05/08/2022 இவ்வருடம் ஆகஸ்டு 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (05/Aug /2022) வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய இரண்டு வெள்ளிக்கிழமைகளில் பௌர்ணமிக்கு அருகில், அதாவது பௌர்ணமி தினத்துக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீமகாலட்சுமி உதித்த நன்னாளை, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து வணங்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவேதான் அன்னை மகாலட்சுமியை
- குரு பூர்ணிமா தினம் (2022 July 13)
குரு பூர்ணிமா என்ற புனித நாள் இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆன்மீகவாதிகளால் தமது குருவை நினைந்து வணங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த நாளாகும் இந்து புராணங்களின் படி குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் முதல் முழு நிலவு அதாவது, பௌர்ணமி தினத்தன்று (Full moon day) “குரு பூர்ணிமா” என கொண்டாடப் படுகின்றது. தங்களது குருமார்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாகும்.