கந்த கவசமாலை

0 0
Read Time:9 Minute, 52 Second

எமது சித்தர்கள், ஞானிகள் எல்லோரும் பொதுவாக முருக பக்தர்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் கூறமுடியும்.

பொதுவாக சித்தர்கள் குரு வழித் தோன்றல்களாகவே இருப்பார்கள். குரு குல சீடர் முறையிலேயே அவர்களுக்கு யோகப் பயிற்சிகள் வழங்கப்படும். அப்படியாக குருவின் வழியில் சீடர்கள் யோகப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்வார்கள், குரு வணங்கிய கடவுளையும் வணங்கிக் கொள்வார்கள். அவ்வாறே பல சித்தர்கள் முருக பக்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

அத்துடன் முருகப் பெருமான் அதாவது முருகர். முருகர் என்ற சித்தர் கி மு 9000 ஆண்டுகளில் வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது. கந்தபுராணமும் இக்காலகட்டத்துக்கு உரித்தானதே. முருகச் சித்தரே அதாவது முருகப்பெருமானே அகத்தியருக்கு குருவாக இருந்து யோகம் கற்பித்தார் எனவும் பின்னர் அகத்திய மாமுனிவரிடம் இருந்து பல சித்தர்கள் யோகம் கற்று சித்தி அடைந்ததாகவும் ஆராட்சிகள் குறிப்பிடுகின்றன. இதனாலேயே அகத்தியர் வழிவந்த சித்தர்கள் முருக பக்தர்களாக விளங்கினார்கள் என்பதுவும் அறியப்படுகிறது.

எனது குருவான போளிவாக்கத்தில் வாழ்ந்து சமாதியாகிய பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளும் ஒரு சிறந்த முருக பக்தராவர்.

சித்தர்கள் பாடல் வடிவில் மக்களுக்கு நன்மையானவற்றை தந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் பாடல் அல்லது செய்யுள் வடிவிலேயே சித்தர்கள் மற்றும் அறிஞர்கள் மக்களுக்காக அறிவுரைகள் மற்றும் வைத்திய குறிப்புகள் வழங்கி இருக்கிறார்கள். மக்கள் மனதில் இலகுவாக மனனம் செய்யும் வகையில் பாடல்கள் அமையும். செய்தி அல்லது கட்டுரை வடிவிலும் பார்க்க பாடல்களே இலகுவாக மக்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதுவே அடிப்படையான காரணமாகும்.

அடுத்ததாக மந்திரம் என்பது ஓரெழுத்திலும் அமையும் ஒரு சொல்லிலும் அமையும் பல வரிகளிலும் அமையும். உதாரணமாக “ஓம்”, “ர”, “ரி”, “டு” என்பவை ஓரெழுத்து மந்திரங்கள்.

“சிவ”, “நமசிவய”, “சரவணபவ” என்பவை பல எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களாகும்.

“ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்”

என்பது இரு (பல) வரிகள் கொண்ட விசுவாமித்திர முனிவரால் எமக்கு கொடுக்கப்பட்ட காயத்திரி மந்திரமாகும்.

மந்திரங்கள் சித்தர்கள் மற்றும் மகான்கள் தியான நிலையில் அல்லது தவ நிலையில் இருக்கும்போது அறிந்து கொள்ளும் எழுத்துக்கள் அல்லது சொற்கள். அவர்களால் பரீட்சிக்கப்பட்டு அவை திக்கும்போது அதாவது அவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும் போது அவற்றினை ஏனையவர்களும் பின்பற்றி நன்மை பெறட்டும் என்ற நோக்கில் பிறருக்கு செய்யுள் வடிவில் வழங்கி இருக்கிறார்கள்.

உதாரணமாக நாம் கந்த சஷ்டி கவசத்தினை எடுத்துக் கொண்டால், தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். இந்தப் பாடலில் முருகப் பெருமானின் பெருமைகளையும் விளக்கி இருக்கிறார், இந்தப் பாடல் படிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கி இருக்கிறார். அத்துடன் பாடலில் மந்திரச் சொற்களையும் உள்ளடக்கி இருக்கிறார். உதாரணமாக

“ரஹண பவச ர ர ர ர ர ர ர

ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநபவ சரஹண வீரா நமோநம

நிபவ சரஹண நிறநிற நிறென”

எனும் வரிகளை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வரிகளில் உள்ள எழுத்துக்கள் மந்திர எழுத்துக்களாகும். அதாவது நாம் கந்த சஷ்டி கவசம் படிக்கும்போது எம்மை அறியாலேயே இந்த மந்திர எழுத்துக்களையும் உச்சாடனம் செய்கிறோம். அதாவது அந்தச் சொற்களை உச்சரிக்கும் போது எமது உடலில் உள்ள உறுப்புக்கள், நரம்புகள் இன்னும் ஆன்மீக ரீதியாக ஆழமாகப் பார்க்கும்போது சக்கரங்கள் தூண்டப்படுகின்றன என்பதுவே உண்மையாகும்.

மந்திர எழுத்துக்கள் உச்சரித்தல் என்பது ஒலி வடிவமான தூண்டுதலாகும். உதாரணமாக திருவிழாக்களில் உடுக்கு அடிக்கும் போது அல்லது பிற வாத்தியங்கள் வாசிக்கும் போது ஏற்படும் ஒலிவடிவான தூண்டுதலால் சிலர் உந்தப்பட்டு தம்மை அறியாமலேயே ஆடத் தொடங்கி விடுவார்கள். இவ்வாறே மந்திர ஒலிகளும் எம்மை அறியாமலேயே எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். பாடல்கள் மற்றும் மந்திரங்களை நாம்தான் படிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பதில்லை பிறர் படிக்க நாம் காதால் கேட்டாலே போதுமானது. முழுப் பலனும் உண்டு.

கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் போல முருக கவசத்திலும் பல மந்திரச் சொற்கள் அடங்கியுள்ளன. அது மட்டுமன்றி கந்த சஷ்ட்டி கவசம் ஒருநாளைக்கு 36 தடவைகள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிக்க முழுப் பலனும் கிடைக்கும் எனப் பாடலில்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது

“கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்

மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்”

அதாவது “ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு” அதாவது ஒரு நாளைக்கு 36 தடவைகள் படிக்க வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதேபோல கந்தகவசமாலையினை தினமும் 11 தடவைகள் படித்தால் பல நன்மைகள் உண்டு எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

சரவணபவனே, சரவணபவனே, சரவணபவனே சண்முகனே

ரவண பவசனே, ரவண பவசனே, ரவண பவசனே ரரர

பவச ரவணனே, பவச ரவணனே, பவச ரவணனே பபப

ஆறுபடை வீட்டில் உறைந்திடும் வேலா

குன்றுகள் தோறும் குவிந்திடும் வேலா 

ணபவ சரவ, ணபவ சரவ, ணபவ சரவ சண்முகா

பவச ரவண, பவச ரவண, பவச ரவண பகலவா

சரவண பொய்கையில் உதித்த எம் வேலா 

சண்முக வேலா சண்முக நாதா

திருப்பரம் குன்றில் அருள்தரும் வேலா

செங்கதிர் வேலா சிவனின் குமரா

செககண செககண செககண செகனே  

மொக மொக மொக மொக மொக மொக மொகனே

திருச்செந்தூரில் திருவருட் குமரா

பழனியம் பதியில் போகரின் வடிவே

நல்லோர் நினைவில் நலம் தரும் வேலா

நக நக நக நக நக நக நகனே    

டிகுகுண டிகுகுண டிகுகுண டிகனே

சுவாமி மலையில் சிவகுருநாதா

தணிகை மலையில் தணிந்த எம் வேலா 

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

பழமுதிர் சோலையில் பழம் தந்த வேலா

குன்றுகள் தோறும் குவிந்த எம் குமரா

குக்குக் குகுகுகு குக்குக் குகுகுகு குக்குக் குகுகுகு குகுகு

டகுடகு டகுடகு டகுடகு வேலா

டிகு டிகு டிகு டிகு டிகு டிகு நாதா

 

சரவணபவ எனும் மந்திர வேலா

முத்திக்கு வித்திட்ட சரவணபவனே

தினமும் பதினொரு வேளை படித்தால்

வினைகள் தீரும் சித்திகள் தேறும்

நோய் நொடி அகலும் வாழ்வும் சிறக்கும்

பின்னே அவனது திருவடி தானே

கு சிவகுமாரன் ([email protected])

ஓம் சரவணபவ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *