பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே சரணம்

0 0
Read Time:10 Minute, 7 Second
  • குருவே சரணம்
  • ஐயா சரணம்
  • சுவாமியே சரணம்
  • பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே சரணம்
  • போளிவாக்கத்து நாயகனே சரணம்  
  • பட்டாபிராம் தந்த குருவே சரணம்
  • பெருமாள் – ஜெயலட்சுமி அம்மா தம்பதி தந்த குருவே சரணம்
  • குழுமிக்கட்டியென்றெண்ண ஆண்மகனாய்ப் பிறந்த குருவே சரணம்
  • 29 சித்திரை 53 (1953) இல் உதித்த குருவே சரணம்
  • எழுவரில் ஒருவனாய் பிறந்த குருவே சரணம்
  • குடும்பத்தில் ஐந்தாவதாய் வந்துதித்த குருவே சரணம்
  • நித்தியானந்தம் என்ற பெயர் எடுத்த குருவே சரணம்
  • தாய் தந்தை பிரிந்து செல்ல தந்தையுடன் சென்ற குருவே சரணம்
  • ஆறாம் வயதிலேயே தாயைச் சகோதரர்களைப் பிரிந்த குருவே சரணம்
  • தந்தையுடன் மேல்நல்லாத்தூர் தனித்துச் சென்ற குருவே சரணம்
  • அத்தை வீட்டில் ஒதுங்கிய குருவே சரணம் 
  • சிறு வயதிலேயே பாசத்துக்கு ஏங்கிய குருவே சரணம்
  • பள்ளி செல்ல முடியாமல் ஏங்கிய குருவே சரணம்
  • பசிபோக்க மாடு மேய்த்த குருவே சரணம்
  • பொன்னியம்மன் வீதியிலே மாடுகள் மேய்த்த குருவே சரணம்
  • “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று கவலையுற்ற குருவே சரணம்
  • அந்த பொன்னி அம்மனிடமே வினவிய குருவே சரணம்
  • பத்தாவது வயதில் பாம்பாட்டிச் சித்தர் பாடல் அறிந்த குருவே சரணம்
  • “உன் இவ்வுலக வாழ்க்கைக்கு நீ முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்களே காரணம்” என்றுணர்ந்து கொண்ட குருவே சரணம் 
  • பாம்பாட்டிச் சித்தரே முதல் குருவாகிய குருவே சரணம்
  • “நீ உனக்குள்த் தேடி உன்னை அறிந்துகொள்” என்று உணர்ந்து கொண்ட குருவே சரணம்
  • அன்றுமுதல் ஞானம் தேடிய குருவே சரணம்
  • பன்னிரண்டாம் வயதில் பெரியம்மா ஞானகிஅம்மாளால் அரவணைக்கப்பட்ட குருவே சரணம்
  • இட்டலி வித்துப் பின்னர் தையல்த் தொழிலாளியாகிய குருவே சரணம்
  • பொதிகைமலைச் சித்தரிடம் யோகம் கற்ற குருவே சரணம்
  • சஷ்டி நோன்பிருந்து திருச்செந்தூர் சென்று வந்த குருவே சரணம்
  • தினமும் சஷ்டி கவசம் படித்து வந்த குருவே சரணம்  
  • புகையிரதத் தொழிற்சாலையிலும் பணிபுரிந்த குருவே சரணம்
  • வசந்தா அம்மையாரைக் கரம்பிடித்த குருவே சரணம்
  • “இல்லறத்தில் வாழ்ந்துகொண்டு இறைவனைத் தேடு” என்றுரைத்த குருவே சரணம்
  • “இல்லறத்தில் வாழ்ந்துகொண்டே ஆன்மீகத்தில் நிலைத்திரு” என்றுரைத்த குருவே சரணம்
  • “மனம் மனதினில் ஒடுங்கி, மாயை எல்லாம் நீக்கி, தூய ஒளி கிளம்பி என் துன்பம் எல்லாம் தீர்த்து தாயைக் காட்டி தந்தையுடன் சேர அருள்புரிய வேண்டும் பராபரமே” என்றுரைத்த குருவே சரணம்
  • குடும்பம் ஆன்மிகம் என இரு வாழ்க்கை வாழ்ந்த குருவே சரணம்
  • மூன்று பிள்ளை பெற்றெடுத்த குருவே சரணம்
  • கணேசா சுவாமிகளிடம் யோகம் கற்றுத் தெளிந்த குருவே சரணம்  
  • தன்னை உணர்ந்து தான் யாரென்று அறிந்துகொண்ட குருவே சரணம்
  • இறைவனுடன் இணைந்துகொண்ட குருவே சரணம்
  • “இந்த மனசை அழித்தால், ஆன்மா உடலில் இருந்து பிரிந்து சென்று இறைவனுடன் இணைந்து கொள்ளும். அதுவே முக்திநிலை. இறைவன் ஆணையிட்டால், அப்புறம் இறைவனுடன் கலந்திருக்கும் அந்த ஆன்மாவில் இருந்து திரும்பவும் மனம் உருவாகி வந்துதான் உபதேசங்கள், அறிவுரைகள் எல்லாம் இவ்வுலகத்திற்குக் கூறும். அதுவே உண்மையான போதனைகள்” என்றுரைத்த குருவே சரணம்
  • அவ்வாறே போதனைகள் கூறிய குருவே சரணம்
  • யோகம் போதிக்க ஒரு பாடசாலை அமைத்த குருவே சரணம்
  • “ராஜயோக பாடசாலை” அமைத்த குருவே சரணம்
  • போளிவாக்கத்தில் இருந்து ஆன்மிகம் வளர்த்த குருவே சரணம்
  • பௌர்ணமிதோறும் பாடம் கொடுத்த குருவே சரணம்
  • இந்த உலகத்துக்கே ஆன்மிகம் உரைத்த குருவே சரணம்
  • “நான் அறிந்து கொண்ட இறைவனை அடையும் மார்கத்தைப் பிறருக்கும் கூறுகிறேன் எடுப்பவர் எடுத்துக் கொள்ளட்டும்” என்று வாழ்ந்த குருவே சரணம்
  • “பத்திக்கு முருகன் ஆன்மீகத்திற்கு எனது சமாதிநிலை” என்றருளிய குருவே சரணம்
  • அகத்தியன் கூற சண்முகநாதன் ஆலயம் அமைத்த குருவே சரணம்
  • தனது சமாதியை தானே அமைத்த குருவே குருவே சரணம்
  • தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் உணவளித்த குருவே சரணம்
  • சாதி, இன, மத பேதமின்றி அனைவரையும் அரவணைத்த குருவே சரணம்
  • “கேள்வி பதிலாக” ஆன்மிகம் விளக்கிய குருவே சரணம்
  • “கடவுளைத் தேடுபவனுக்கு எந்த அணிகலனும் தேவை இல்லை” என்று வாழ்ந்த குருவே சரணம்
  • “கடவுளைத் தேடுபவனுக்கு மதம் தெரியாது மதத்தைத் தேடுபவனுக்குக் கடவுள் தெரியாது” என்றுரைத்த குருவே சரணம்
  • வெள்ளை வேட்டியுடன் வாழ்ந்து காட்டிய குருவே சரணம்
  • அவ்வப்போது தான் யாரென்று சூசகமாக உணர்த்திய குருவே சரணம்
  • “தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்” என்றுரைத்த குருவே சரணம்
  • “நீ செய்த நன்மையையும் தீமையும் அழிந்தால்த்தான் முத்தி” என்றுரைத்த குருவே சரணம்
  • “நீ செய்த பாவமும், எடுத்த சாபமும் அழிக்கப்பட்டாலே முக்தி” என்றுரைத்த குருவே சரணம்
  • “பாவம் அழிய அன்னதானம், சாபம் அழிய யோகநிலை” என்றுரைத்த குருவே சரணம்
  • “யோகமே முத்திக்கு வழிவகுக்கும்” என்றுரைத்த குருவே சரணம்
  • தனது சமாதியில் மகான்களும் கோபுரத்தில் சித்தர்களும் நிறுவிய குருவே போற்றி
  • சித்தர்களுள் சித்தராக தன்னையும் நிறுத்திய குருவே போற்றி
  • தான் யாரென்று சூசகமாக உணர்த்திய குருவே போற்றி
  • சித்தர் பெருமானே போற்றி
  • வெண் சடையும், நீண்ட வெண்தாடியும், நேர்த்தியான பார்வையும், சொன்ன சொல் மாறா வன்மையும் கொண்டிருந்த சித்தர் பெருமானே போற்றி
  • என் ஆன்மீகப் தேடலை பூர்த்தி செய்த குருவே போற்றி
  • என்னையும் தன் சீடனாக்கி பல அறிவுரைகள் கொடுத்த குருவே போற்றி
  • எனக்கு ஆன்மீக உபதேசம் கொடுத்த குருவே போற்றி
  • எனக்குத் தந்தையாக, ஆசானாக, குருவாக இருந்த குருவே போற்றி
  • என் மனம் தளம்பியபோதெல்லாம் “நீயெல்லம் ஒரு ஆன்மீகவாதியா?” என்று தட்டிக் கேட்ட குருவே போற்றி
  • என் சந்தேகங்களுக்கெல்லாம், “நான் கூறிய பாடங்களை எல்லாம் செய்துவா உனக்கு எல்லாம் புரியும்” என்று அறிவுறுத்திய குருவே போற்றி
  • “எழுது சிவா” என என்னைத் தினமும் எழுத வைத்த குருவே போற்றி
  • தன் சுயசரிதை எழுத எனக்குப் பாக்கியம் கொடுத்த குருவே போற்றி
  • “என் சமாதிக்கு வா உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்” என்று வாக்குரைத்த குருவே போற்றி
  • சமாதி நிலையில் இருந்தும் எனக்கு அடுத்த ஒரு உபதேசம் நயன உபதேசமாகக் கொடுத்த குருவே போற்றி
  • 17 மே 2023 அன்று சமாதிநிலை எடுத்த சித்தரே போற்றி
  • பிரதோஷ திதியில் சமாதியாகிய சித்தரே போற்றி
  • “எனக்குள் எரியும் நெருப்பு என் சமாதியில் இருந்து அருள்தரும்” என்றுரைத்த சித்தரே போற்றி
  • “இல்லறத்தில் வாழ்ந்துகொண்டு இறைவனைத் தேடு” என்றுரைத்த சித்தரே போற்றி
  • “இறைவனைத் தேட இல்லறம் ஒரு தடையல்ல” என்று வாழ்ந்து காட்டிய சித்தரே போற்றி
  • இல்லறத்தில் வாழ்ந்து ஆன்மிகம் உரைத்த சித்தரே போற்றி

இல்லறச் சித்தரே போற்றி போற்றி

இல்லறச் சித்தரே போற்றி

சீடன் சிவகுமாரன் கனடா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *