பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி கோபுர கும்பாபிஷேகம் 2022

0 0
Read Time:5 Minute, 9 Second

பிராம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி பூசையும் ராஜயோக உபதேசங்களும் (தீட்சைகளும்) 16/04/2022 மற்றும் 17/04/2022 ஆகிய நாட்களில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20/04/2022 மற்றும் 21/04/2022 ஆகிய நாட்களில் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதிக்கு மேலாக எழுப்பப்பட்டுள்ள கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த இரு நிகழ்வுகளில் நடைபெற்ற வைபவங்களின் காணொளிகளை இங்கு இணைத்துளோம்.

*****

சித்தர்கள் மகான்களை ஏன் நாம் வணங்க வேண்டும்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது விளக்கம்.

*****

சமாதியில் இருக்கும் 18 மகான்கள் குரு விளக்கம்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதியின் வெளி முகப்பில் குருவின் பிரதம சீடர்களான பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா மற்றும் அவரது பாரியார் பிரம்மஸ்ரீ யமுனா அம்மாவின் சிலைகள் சமாதியைப் பார்த்தவாறு வைக்கப் பட்டிருக்கின்றன. அப்படியே சமாதியைச் சுற்றி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ராகவேந்திரர், ரமணமகரிஷி, பாம்பன் சுவாமிகள், திருவள்ளுவர், காரைக்கால் அம்மையார், ஒளவையார், சுவாமி விவேகானந்தர், அருணகிரிநாதர், வள்ளலார், கணேச சுவாமிகள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள், பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளின் பாரியார் வசந்தா அம்மையார், சேசாஸ்திரி சுவாமிகள், சுரைக்காய் சித்தர், ஆதி சங்கரர், கிருபானந்த வாரியார், சீரடி சாய்பாபா, காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரர், ஆகிய மகான்களது சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

*****

சமாதி கோபுரம் 18 சித்தர்கள்.

கோபுரத்தில் பின்வரும் பதினெட்டுச் சித்தர்களது சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. அவையாவன பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள், அகத்தியர், திருமூலர், கோரக்கர், கருவூரார், கமலமுனி, இராமதேவ சித்தர், இடைக்காடர், அழுகணிச் சித்தர், போகர், பாம்பாட்டி சித்தர், சட்டைமுனி, புலிப்பாணி, சித்தர் சுந்தரானந்தர், புண்ணாக்கீசர், குதம்பைச்சித்தர், மச்சமுனி, தேரையர் ஆகும்.

*****

பிரம்ம சூத்திர குழு ஆச்சிரமம் தொகுப்பு.

ஆச்சிரமமும் அதன் சுற்றுச் சூழலும் மற்றும் குரு  அவ்வப் போது குறிப்பிடும் கருப்பு நாய்க்குட்டி, ஆசிரமத்தில் அமைந்துள்ள உணவு மண்டபம், மற்றும் கும்பாபிஷேகத்தின் போது நடைபெற்ற வாண வேடிக்கை தொகுப்பு காணொளி.

*****

போளிவாக்கம் திருவள்ளுர் சண்முகநாயகன் முருகன் ஆலயம்

*****

சண்முகநாயகன் ஆலயத்தின் சிறப்புப் பற்றி சுவாமிகள் ஆற்றிய விளக்கம்.

*****

பிரம்ம சூத்திர குழு சமாதி கோபுர கலச பூசை (20/04/2022)

*****

பிரம்ம சூத்திரக் குழு முருகன் திருக்கலியாணம் (20/04/2022)

*****

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் சமாதி அபிஷேகம் (21/04/2022)

*****

பிரம்ம சூத்திர குழு சமாதி கோபுர கும்பாபிசேகம். (21/04/2022)

*****

சுவாமிகளின் சீடர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்கள் ஆற்றிய உரை. (2019)

*****

சீடன் சிவகுமாரன் (கனடா) ஆற்றிய உரை. (2019)

*****

மேலும் சில சீடர்களது உரைகள். (சிவபாக்கியம் – சிங்கப்பூர், வதனி – இங்கிலாந்து, கவுசல்யா – கோவை, மோஹனலஷ்மி – சென்னை, ராஜேஸ்வரி – மலேசியா. (2019)

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %