மனிதன் இறக்கும் தருணம் (கவிதை)

0 0
Read Time:9 Minute, 57 Second

மனிதன் இறக்கும் தருணத்தில்

ஆத்மம் கூறும்

ஆத்ம இறுதி உபதேசம்

….

இன்னும் சற்று நேரத்தில்

இறக்க போகும் ஒருவன்

படுத்த படுக்கையாக இருக்கிறான்.

பிறந்து

வளந்து

இளைஞனாகி

முதுமை கண்டு

எமன் அருகில் வந்தும் விட்டான்

இன்னும் சில நாழிகையில்

இறக்க போகும் அவன்

கருவரை சிசுபோல

கடும் அமைதி

அதன் உள்ளே கடும் வலி.

உடல் செயலற்று இருந்தது

மனம் ஓய்ந்தே விட்டது

உறவு நினைவுகள்

ஓடியூம் இருந்தது.

கண் மூடியும் இருந்தது.

அதில்

நீர் வற்றியும் இருந்தது.

வயிறும்

உணவு மறுத்தது

வாயும் பேச மறுத்தது

காதும் கேட்க மறுத்தது.

மூளையும்

செயலற்று இருந்தது.

நாசியும் வாசனை துறந்தது.

ஐம்புலனும் அடங்கி இருந்தது.

மீண்டும்

மூல மனமும் ஆட்சிக்கு வந்தது.

நாசியும்

அதன் இறுதி சுவாசத்தை

எண்ணியே கொடுத்தது.

அங்கு தான்

அந்த

அதிசியம் நடந்தது.

அந்த இறுதி சுவாசம்

அதன் ஆத்மத்தை தட்டி எழுப்பியது.

ஆத்மம் அதன்

உயிரோடு பேசியது.

ஆத்ம உபதேசமும் தந்தது.

ஆத்ம உபதேசம்

…..

அழியா ஓடு கொடுத்தேன்

அதில்

என்னையே கூடாக்கினேன்

கூட்டுக்குள்

உன்னை உயிராக்கினேன்.

ஓட்டுக்குள்

உன்னை பிறக்க செய்தேன்

மூல மனதாக நானே இருந்தேன்.

முதல் மனதாக

உயிரே நீயே இருந்தாய்.

உன் உருவங்கள் மாறியது

கூடவே

உன் மனமும் மாறியது.

மனம்

மாறாது

மூல மனம்

உயிர் மனம்

இந்த இரண்டு மனதோடு

வாழ்ந்து இருந்தால்

உன் உயிர்

என்னோடு இணைந்தும் இருக்கும்

இந்த வயதிலும்

சிறு குழந்தை தேகம் போல

உன் சரீரமும் இருந்து இருக்கும்.

உன் சரீரத்தை சாய்த்தது

உன்

இப்பிறவியை சாய்த்தது

உன்னிடம் மாறிய

மனங்களே.

தற்சமயம்

என்ன நடந்தது உணர்ந்தாயா..???

உன்

ஐம்புலனும் அடங்கி இருக்கிறது

உன் மனம் அதில்

ஒடிங்கியும் இருக்கிறது

இதுவே

நீயாக

செய்து இருந்தால்

உனக்கு ஏன் இந்த நிலமை…???

இதை

ஏன்

இப்பொழுது கூறுகிறாய்.

நான்

நன்றாக வாழந்த போதே

ஏன் கூற வில்லை…என

நீ

என்னை கேட்பாய்….??

அறிவு

என்ற ஒன்றை

உமக்கு சீ தனமாக கொடுத்தோம்.

வாய்ப்புகளும்

எண்ணிலடங்காக கொடுத்தோம்.

நீ

உணரவில்லை.

….

நீயாக உணரவில்லை என்றாலும்

உனக்கு

ஒரு நற்செய்தி

அது

நீ

இறக்கும் தருவாயில்

இயற்கையாகவே

பிறந்த

மானிடர்களுக்கு மட்டும்

ஐம்புலனும்

தானே அடங்க படும்

இந்த

உபதேசமும்

இறுதியில்

அனைவருக்கும் கொடுக்கப்படும்.

இந்த ரகசியத்தை

நீ

யாருக்கும் கூற இயலாது.

காரணம்

இப்பொழுது

நீ

இறக்கப்போகிறாய்.

….

மீண்டும்

ஒரு நற்செய்தி உனக்கு.

ஆம்

நீ

மீண்டும்

உன் கணக்கின்

காலம் வருகையில்

பிறக்க போகிறாய்.

அந்த கண்க்கை

நீ

இறந்த உடன் தெரிந்து கொள்வாய்.

அதனால்

அழுகாதே

வருந்தாதே

ஆனந்தமாக

இறப்பை ஏற்றுக்கொள்

ஓடமான நீ

மீண்டும்

ஒரு ஓட்டுக்குள் பிறப்பாய்…

உன்னோடு

நானும் பிறப்பேன்.

நான்

இன்றி

நீ இல்லை.

உன்

நீ

நான் ஆகும் பதமே

உனக்கும் மோட்சம்.

ஆனால்

இந்த

ஆத்ம உபதேசம்

உன் தாயின் கருவரை வரை

உன்னோடு இருக்கும்.

பிறந்த

எட்டு நாள் வரையும் இருக்கும்.

மூல மனம்

உனக்கு உபதேசம் செய்யும்.

அந்த

மூல மனதின் மூலமே

நான் தான்

இந்த ஆத்மா தான்.

நீ

தற்சமயம்

துர்மரணமாக

இறக்க போகிறாய்.

அதனால்

நான் யார்

என்ற ரகசியம் தெரிந்தாலும்

என்னை பார்க்க

உன்னால் இயலாது.

அதை பார்க்க வேண்டும் ஆயின்

நான்

கொடுத்த சரீரம்

காய கல்பமாக இருக்க வேண்டும்.

நன்றாக நினைவு கொள்

நீ

பிறந்த எட்டு நாளில்

அனைத்து

ஆத்ம ரகசியமும்

உன்னில் இருந்து அழிக்கப்படும்.

எட்டாவது நாளில்

உன்னிடம்

ஒரு மனம் வரும்.

அது

எட்டு வயது வரை இருக்கும்.

அதுவே

ஜீவ மனம்.

அந்த மனமே

மூல மனதோடு ஒன்றும் மனம்.

ஆனால்

அது

அந்த மனதிற்கு தெரியாது.

அதன் பின் வரும்

எந்த மனதிற்கும் தெரியாது.

உன்

மூளையில் இந்த பதிவு இருக்காது

மீண்டும் ஒரு ரகசியம்

சொல்கிறேன் கேள்.

உன்

அத்தனை ஜென்ம பதிவும்

ஆத்மத்தில் இருக்கும்.

முடிந்தால்

கண்டு பிடிப்பாய்

….

இந்த ரகசியமும்

உன்னில்

நினைவு இருக்காது.

மீறியும்

இந்த இரகசியத்தை யாரும்

கூறினாலும்

நீ

கேட்கவும் மாட்டாய்.

அப்படி ஒரு மனம்

உனக்கு பிறக்கும்.

…..

நீ

இறக்கும் வேளை வந்து விட்டது

மீண்டும்

நீ

பிறக்கும் தருணம் வரும்போது

மீண்டும் பிறப்பாய்.

ஆத்மம்

அதன்

உபதேசத்தை முடித்தது.

அவன்

இறக்கப்போகும் அவன்

கை எடுத்து வணங்க முயன்றும்

முடியவில்லை.

ஆத்மத்தை நோக்கி கூறுகிறான்

இருக்கும் வரையில்

உன்னை உணரவில்லை

வணங்கவிலலை

இப்பொழுது

வணங்க நினைக்கிறேன்

முடியவில்லை..

இந்த பிறவியில்

நான் தவறுசெய்து விட்டேன்

அடுத்த பிறவியில்

நான்

இந்த தவறை செய்ய மாட்டேன்.

மீண்டும்

வரமாக

தரும் பிறப்பை

சிறப்பிப்பேன்

இறப்பும்

பிறப்பும் அறுப்பேன்.

ஆத்மமே

உம்மை

வணங்க ஆசைப்படுகிறேன்

கை வரவில்லை.

இறப்புக்கு முன்

என்

வணக்கத்தை

நன்றியை

ஏற்றுக்கொள்ளுங்கள்

என்கிறான்

இறக்கப்போகிறவன்.

…..

ஆத்மா

மீண்டும் கூறியது

…..

இதையே தான்

நீ

ஆயிரம் ஆயிரம் முறை

இறக்கும் போதும்

கூறினாய்.

…..

இப்பொழுதும் கூறுகிறாய்.

உனக்குத்தான்

என்னை தெரியாது

எனக்கு

உன்னை

உன்

அந்தனை பிறவியையும் தெரியும்.

…..

உன்

ஒவ்வோரு இறப்பிலும்

உன்னை

சந்தித்து கொண்டே இருக்கிறேன்.

நீயூம்

மனிதனாக வாழ்ந்தவன் அல்லவா…??

வாக்கும்

கொடுத்து கொண்டே இறக்கிறாய்.

…..

இறக்கும் நிலையில் இருக்கும்

உன்

வணக்கத்தை

நன்றியை

நான்

ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

…..

நீ

உயிருரோடு இருக்கும் போது

என்னை வணங்கு..!!

எனக்கு நன்றி சொல்..!!

அப்பொழுது

நான்

ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போது

நீ

நீ

கொடுமை படுத்திய

அந்த

புனித உடல்

முக்தி பெற போகிறது.

பஞ்ச பூத

அதன்

தாய் தந்தையோடு

ஐக்கியம் ஆக போகிறது.

நீ

செய்த பாவங்களில்

கொடுமையானது

பிராய்சித்தம் இல்லாதது

கள்ளம்

கபடம் அற்ற

அந்த

உடலுக்கு

நீ செய்த தீங்கு தான்.

உன் உடலுக்கு மோட்சம் கிடைத்து விட்டது

உனக்கு

மோட்சம் கிடைக்கவில்லை.

உடல்

ஆத்மம்

இந்த

இரண்டுக்கும் உள்ள

புனிதத்தை

அடுத்த பிறவியில் ஆவது

உணர முயற்சி செய்.

நீ

எத்தனை முறை

பாவமும் கொடுமையும் செய்தாலும்

மீண்டும்

உன்னை

மன்னித்து

மறு வாய்ப்பும் தரும்

இந்த

ஆத்ம குணத்தை

அடுத்த பிறவியில் ஆவது

உணர முற்படு

உன்னை

மீண்டும்

நம்புவது போல

நல்ல நம்பிக்கை யில்

நம்பி கை வை.

…..

ஆத்மா ஆத்ம உபதேசம் நிறைவை செய்தது.

…..

அவன்

இறந்து போனான்.

…..

உயிரை

உடல்

வெளியே

ஒரு கழிவாக தள்ளியது.

…..

உடல்

முக்தி பெற்றது.

…..

உயிர்

அதன்

இடை வாசம்

எமவாசம்

தேவவாசம்

தீர்ப்பு வாசம்

காத்து இருப்பு வாசம் முடித்து

இடம் தேடும் வாசம்

உடல் தேடும் வாசம்

தாய் தந்தை தேடும் வாசம்

அனைத்தும் முடித்து

சவத்தை இழந்த உயிர்

மீண்டும்

ஒரு

தாயின்

கரு பைக்குள்

மீண்டும்

கரு ஆனது

அந்த உயிர்

பிரசவத்திற்கு

தயார் ஆன தாயின் வயிற்றில்

…..

இந்த பதிவு முடிவு அடைவது இல்லை

பிறந்த பிறவி போல.

…..

அடுத்து

என்ன ஆனது.??

மீண்டும்

முதலில் இருந்து

படியூங்கள்

மிக தெளிவாக புரியும்.

நம

ஓம் நமசிவாய

மித்ரன்

(முகம் தெரியாத ஒரு அன்பரின் பதிவு என் மனத்தைக் கவர்ந்தத்து அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்)

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %