ராஜயோகப் பாடசாலை
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை.
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.
முருகன் ஆலயம்.
ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது.
குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும்.
இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார்.
எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது.
கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம்.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர்.
சமாதி
குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஐயா ஆங்கிலத் திகதி 17 மே 2023, தமிழ்த் திகதி வைகாசி மாதம் மூன்றாம் திகதி அன்று பிரதோசமும், மாத சிவராத்திரியும் கூடிய பிரம்ம முகூர்த்தத்தில், தேய்பிறைத் துவாதசி திதியில் அதிகாலை மூன்று மணியளவில் சமாதிநிலை அடைந்தார்.
அன்று மாலை மூன்று மணி முதல் குருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஆச்சிரமத்தில் அமைந்துள்ள சமாதியில் குருவின் உடல் சமாதி நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முருகன் சந்நிதியில் அமைந்துள்ள அந்தச் சமாதியானது குருவினால் 13 – 10 – 2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஒவ்வெரு வருடமும் மே மாதம் 17 ஆம் திகதிகளில் சமாதிக்குச் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
ஜூலை 04 ஆம் திகதி முதல் தினமும் மாலை 04 மணி முதல் மாலை 06 மணிவரை குருவின் சமாதிக்கு தின பூசை நடைபெற்று வருகிறது. பல பக்தர்கள், சீடர்கள் அங்கு வந்து சமாதி பூசையில் கலந்து கொண்டு சமாதி தரிசனம் செய்து வருகிறார்கள்.
முருகன் சன்னிதானத்தில் முருகன் மூலஸ்தானத்திற்கு எதிர்ப்புறமாக அந்த மண்டபத்தின் மறுமுனையில் சமாதி அமைந்துள்ளது.
திருக்கோவில் அமைந்துள்ள இடம்:
போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம்.
Tiruvallur, Polivakkam, Tamil Nadu 602001.
ஏனைய இடங்களில் அமைந்துள்ள சுவாமிகளின் கோவிலும் தியான மண்டபமும்.
தமிழ்நாடு, தருமபுரியில் அமைந்துள்ள கோவிலும் தியான மண்டபமும்
ஆச்சிரமம் அமைந்துள்ள இடம்:
குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமம்
கதிர்நாயக்கன அள்ளி, ரோஜா நகர், மாடன் சிட்டி,
தருமபுரி, தமிழ்நாடு.
தொடர்புகளுக்கு:
பிரம்மஸ்ரீ விஜயகுமார் சாமி (தலைவர்), போன்: 98426 29977
பிரம்மஸ்ரீ சுப்பிரமணி சாமி (பொருளாளர்), போன்: 95247 63575
மலேசியாவில் Ayer Tawar, Perak Darul எனும் இடத்திலே அமைந்துள்ளது.
தியாகராஜன் மலேசியா
Phone 60 16 503 1340 (WhatsApp)
Lot 4, Jalan paya nibong bt16,
Kampung Wellington 32400,
Ayer Tawar perak, Malaysia.
ஆச்சிரம நிகழ்வுகளைத் தாங்கிய காணொளிகள்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது அறிவுரைகள், கேள்வி பதில் நிகழ்வுகள் மற்றும் ஆச்சிரம நிகழ்வுகளைத் தாங்கிய காணொளிகள் YouTube மூலமாக தினமும் அவரது சீடர்களால் வெளியிடப்படுகிறது.
Brama Suthra Kulu
https://www.youtube.com/c/bramasuthrakulu/videos
GURU NITHYA JOTHI
https://www.youtube.com/channel/UCd7a_3u87c_BZYOZONpMYUQ/videos
APPAR TV
https://www.youtube.com/channel/UC6v7_PLDSMcDGJNCfPJOoNQ/videos
Brahma Suthrakulu
https://www.youtube.com/channel/UChgyhTd6Zdwr8baTbmewDMg/videos
GuruNithyam TV
https://www.youtube.com/channel/UCdcm6pEDiOFYGtz_U5WneUw/videos
———————————————————————————–
தொடர்புகளுக்கு:
பிரம்மஸ்ரீ ஜீவானந்தம் ஐயா: (91) 8122279790
பிரம்மஸ்ரீ தியாகு ஐயா: (91) 8825454432
பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா: (91) 7904189707
— அன்பே சிவம் —
Superb ??
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்