சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை May 17 2024
சற்குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது முதலாம் ஆண்டு சமாதி பூசை எதிர்வரும் மே 17, 2024 அன்று போளிவாக்கத்தில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரகுழு ஆச்சிரமத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்று குருவின் சமாதி பூசைகள் நடைபெற்று சமாதி வழிபாடும் நடைபெறும். அங்கு அமைந்துள்ள சண்முகநாயகன் முருகன் ஆலயத்திலும் சிறப்பு பூசைகள் நடைபெறும். அன்று உபதேசம் வழங்கப்படும். விரும்புபவர்கள் உபதேசம் எடுத்துக் கொள்ளலாம். அன்று முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.
சிறப்பு நிகழ்வாக, அன்றைய தினம் 230 மூலிகைகள் சேர்த்து பொடி செய்யப்பட்ட “மூலிகைப் பொடி” குருவின் சமாதியின் முன்றலில் ஏற்றப்படும் யாக தீபத்தில் தூவி வணங்கப்படும். அது மட்டுமல்லாது அங்கு வரும் அனைவருக்கும் மூலிகைப் பொடி இலவசமாக வழங்கப்படும். அவர்களும் தங்கள் கைகளால் அந்தத் தீயில் பொடியைத் தூவி வழிபடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இந்த மூலிகைப் பொடியானது தீயில் எரியும் பொழுது அதிலிருந்து எழும் புகையானது அவ்விடத்தினைத் தூய்மையாகும். அவ்விடத்தில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை அகற்றும். அது மட்டுமல்லாது அப்புகையினைச் சுவாசிப்பவர்களது உடலிலும் உள்ள எதிர்மறையான எண்ணங்களையும், பல நோய்களையும் நீக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.
உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்துவரும் குருவின் பக்தர்கள் சீடர்கள் அனைவரும் நேரில் வந்து பூசைகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
அன்று நேரில் வந்து சமாதி பூசைகளில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக சமாதியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் ஒழுங்குகள் செய்யப்படும்.
அன்று நேரில் வந்து சமாதி பூசைகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பொடி பெற்றுக்கொள்ள விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
திருக்கோவில் அமைந்துள்ள இடம்:
போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம்.
Tiruvallur, Polivakkam, Tamil Nadu 602001.
தொடர்புகளுக்கு:
பிரம்மஸ்ரீ ஜீவானந்தம் : (91) 8122279790
பிரம்மஸ்ரீ சீனிவாசன் : (91) 7904189707
பிரம்மஸ்ரீ தியாகு : (91) 8825454432
சித்தர்கள் மறை மொழியில் (பரிபாஷை) அருளிய பின்வரும் யாக மூலிகைகள் பொடியாக்கப்பட்டு யாகத் தீயில் இட்டு வணங்கப்படும்.
வெட்டி வேர், தாளிசபத்திரி, இலவங்கப்பட்டை, மருதம் பட்டை, வேலம் பட்டை, ஆலம் பட்டை, மலைதாங்கி அல்லது குன்று தாங்கி, கோபுரம் தாங்கி, பனி தாங்கி, இடி தாங்கி, சுமை தாங்கி, தேக்கு, சிறு தேக்கு, வெண்தேக்கு, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கரு மஞ்சள், காட்டு மஞ்சள், கரு நெல்லி, நெல்லி, பிள்ளைக்காய், வெள்ளெருக்கு, வெள்ளறுகு, அருகம்புல், ஆவாரை, தகரை, தேவதாளி, மராத்தி மொக்கு, கோரைக் கிழங்கு, கோஷ்டக் கிழங்கு, நிலப்பனை, பூவாரங் கிழங்கு, குறளிக் கிழங்கு, கொடி வல்லி, சீந்தில் கொடி, கருல் கொடி, விராலி மூலிகை, ஏலக்காய், வாயுவிலங்கை, மாவிலங்கை, மகாவில்வம், துளசி, எலுமிச்சை, விஷ்ணு கிராந்தி, ஆலம் சமிது, சிறு குறிஞ்சி, வலம்புரிக் காய், இடம்புரிக்காய், செம்பட்டை, நாய்க் கடுகு, வெண் கடுகு, அலரி, ஆடாதோடை, நெருஞ்சி, யானை நெருஞ்சில், ஆனை வணங்கி, தொழுகண்ணி வணங்கி, செந்நாயுருவி, குன்றிமணி, அகில், கருங்காலி, வேலம் பட்டை, துத்தி, அதிமதுரம், சிறு கடுகு, சிறு மிளகு, வால் மிளகு, தேத்தான் கொட்டை, ஓரிதழ் தாமரை, வெண் தாமரை, மஞ்ச நெத்தி, அத்தி, ஜோதிப் புல், எலுமிச்சைப் புல், கொப்பரை தேங்காய், பூலான், புளியாரை, வெள்ளை கரிசாலை, உண்ணா மூலி, மதுரக் கிழங்கு, சிறு மூங்கில், வெண் மூங்கில், தேன் களி, சதுரட்சம் பட்டை (உருத்திராட்சம் போல் இருக்கும் நான்கு முகங்கள் கொண்டது), கோரோக்கன்.
இவற்றுடன் இன்னும் பல மூலிகைகளும் சேர்க்கப்படுகின்றன.
“பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமியே போற்றி”
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —