அலைபாயும் மனம்

0 0
Read Time:4 Minute, 9 Second

ஒரு ஊரில் ஒருவன் சோம்பேறியாக இருந்தான். அதனால் அவன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தான் வசதியாக வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தது. தான் எப்படி வசதியாக வாழ்வது என்று ஒருவரிடம் கேட்டான்.

அதற்கு அவர் சொன்னார் “காட்டில் ஒரு சாமியார் இருக்கிறார் அவரிடம் போய்க் கேட்டுப்பார் அவர் வழி கூறுவார்” என்று சொன்னார்.

அவ்வாறே அவன் காட்டுக்குச் சென்று அந்தச் சாமியாரைக் கண்டு தான் வசதியாக வாழத் தனக்கு உதவுமாறு வேண்டினான்.

அதற்குப் பதிலளித்த சாமியார் “நான் உனக்கு ஒரு பூதம் தருகிறேன் அது நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுக்கும்” என்று கூறி அவனுடன் அந்தப் பூதத்தையும் அனுப்பி வைத்தார்.

அவன் அப்பூத்தைதை தனது வீட்டுக்கு அழைத்து வந்து தனக்கு தாகமாக இருக்கிறது குளிர் பானம் வேண்டுமென்றான்.

உடனே பூதம் அவனது தாகம் தீரும் வரை குளிர்பானம் கொடுத்தது.

தனக்கு அறுசுவையுடன் கூடிய உணவு வேண்டுமென்று பூதத்திடம் கேட்டான்.

உடனே அவனுக்கு அறுசுவைக் கறிகளுடன் உணவு பரிமாறியது.

உணவு உண்டபின் தனக்கு பழங்கள் வேண்டுமென்றான்.

பூதம் அவனுக்குப் பழங்கள் பரிமாறியது.

உண்ட மயக்கம் தீர தனக்குப் படுத்துறங்க பஞ்சுமெத்தை வேண்டுமென்றான்.

பூதம் பஞ்சுமெத்தை கொடுத்துப் படுக்க விட்டது.

அவன் கண்ணயர்ந்தான்.

அப்போது பூதம் அவனை எழுப்பி தனக்கு வேலை தரும்படியம் அல்லது அவனைக் கொன்று விடுவதாயும் கூறியது.

அவன் பயந்துபோய் மீண்டும் சாமியாரிடம் சென்று தொடர்ந்து வேலை கொடுக்காவிட்டால் பூதம் தன்னைக் கொன்று விடுவதாகக் கூறியதாகவும் தன்னால் ஓய்வெடுக்க முடியாமலுள்ளதாகவும் கூறினான்.

சாமியார் கூறினார் ஆமப்பா நீ தொடந்த்தும் பூதத்துக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லா விட்டால் பூதம் உன்னைக் கொன்றுவிடும் என்றும் கூறினார்.

தன்னால் தொடர்ந்தும் வேலை கொடுக்க முடியாமலுள்ளது அதற்கு என்ன செய்யாலாம் என்று அவன் சாமியாரிடம் வேண்டினான்.

அதற்குச் சாமியார் அதனால் நிறுத்தமுடியாதவாறு அதற்கு வேலை கொடு அப்போதுதான் உனக்கு நிம்மதி கிடைக்கும். எனவே அப்பூத்ததுக்கு ஒரு நாயைக் கொடுத்து அதன் வாலை நிமிர்த்தும் வேலையைக் கொடு. நாயின் வால் நிமிரும்வரை அது தன் கவனத்தை அந்த வாலை நிமிர்த்துவதிலேயே செலுத்தும். அதானால் அது உன்னைத் தொந்தரவும் செய்யாது என்று விளங்கினார்.

மூலக் கருத்து:

மனமும் அந்தப் பூதம் போலத்தான். நீ ஐம்புலன்களை பயன்படுத்தும் வரை அது உன்னை அவ்வழியே அழைத்துத்துச் செல்லும். உன்னால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமலிருக்கும். வாசியை அதாவது உனது மூச்சை கவனிக்கும் வேலையை உன் மனதுக்குக் கொடு மனம் வாசியில் ஒடுங்க உனக்கு நிம்மதி கிடைக்கும்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %