குரு பூர்ணிமா தினம் (2022 July 13)
குரு பூர்ணிமா என்ற புனித நாள் இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முக்கியமாக ஆன்மீகவாதிகளால் தமது குருவை நினைந்து வணங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த நாளாகும்
இந்து புராணங்களின் படி குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் முதல் முழு நிலவு அதாவது, பௌர்ணமி தினத்தன்று (Full moon day) “குரு பூர்ணிமா” என கொண்டாடப் படுகின்றது.
தங்களது குருமார்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாகும்.
அவர்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
“குரு பூர்ணிமா” என்ற பெயர் எப்படி வந்தது.
குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும்.
இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, இந்த திருநாள் “வியாச பூர்ணிமா” என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர் ஒரு சிறந்த குருவாகக் கருதப்பட்டவர். மேலும், அவர் வேதங்களை 4 வகைகளாக வகுத்தவர். அதாவது, வேதங்களை, “ரிக் வேதம்”, “யஜூர் வேதம்”, “சாம வேதம்”” மற்றும் “அதர்வண வேதம்” என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். இதன் காரணமாக, அவர் “வேத வியாசர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த நான்கு வேதங்களின் அறிவை அவர் தனது மாணவர்களான சுமந்துமுனி, வைஷம்பயனா, பைல், ஜெய்மின் ஆகியோருக்கு வழங்கினார். சிறந்த காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் வியாச முனிவரே.
மகரிஷி வியாசர் நமது மூல குருவாக கருதப்படுகிறார். அவரை நினைவுகூர்ந்து அவரது சீடர்களால் நினைவுகூர்ந்து வணங்கி கொண்டாடப்பட்ட நாளே” குரு பூர்ணிமா” தினமாகும்.
குரு பூர்ணிமா முக்கியத்துவம்:
எம்மை பெத்து வளர்த்து அறிவைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய எமது மாதா, பிதா, குரு தெய்வம் ஆகியோரையும் நாம் நினைவுகூரும் நாள் இந்தத் திருநாளாகும்.
அதாவது, குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். குரு பூர்ணிமா தினத்தில் எமது குருவை நாம் மனதார நினைத்தலும், முனிவர் சித்தர்களது சாமாதிகளுக்கு மற்றும் கோயிலுக்கு சென்று வணங்குவதும் சிறப்பாகும்.
தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக நமது ஆன்மீகக் குருவை எமது வழிகாட்டியை நினைவுகூரும் வகையில், பின்பற்றப்பட்டு வரும் தினம்தான் குரு பூர்ணிமா தினமாகும்.
பௌத்தகர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியமான தினமாகும். இந்த நாளில், புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சார்நாத்தில் ஆரம்பித்தார்.
சமணர்களுக்கும் இந்த நாளை புனிதமான நாளாக அனுசரிக்கின்றனர்.
2022 குரு பூர்ணிமா நேரம்.
பௌர்ணமி திதி 2022 ஜூலை 13 ஆம் தேதி காலை 04:01:55 மணிக்குத் தொடங்கி, 2020 ஜூலை 14 ஆம் தேதி அன்று காலை 00:08:29 மணிக்கு முடிவடைகிறது.
போளிவாக்கத்திலே அமைந்துள்ள பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நாடாத்தப்படும் பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலையில் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —