பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள்
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள்

“குருவே போற்றி”
“பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சாமியே போற்றி”
“இல்லறத்தில் வாழும் சித்தரே போற்றி”
“இல்லற சித்தரே போற்றி போற்றி”
2024 சித்திரை மாதம் 29ஆம் திகதியன்று 77 ஆவது அகவை காணும் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குருவின் ஆன்மீக சிந்தனைகள் உலகெங்கும் பரவி எல்லோரும் இன்புற்று வாழ எமது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். உலகெங்கிலும் பரந்து வாழும் அனைத்து பக்தர்கள் சீடர்களுடனும் இணைந்து நாமும் வாழ்த்துகிறோம்.
தொடரட்டும் தங்கள் ஆன்மிகம் பயணம். மலரட்டும் தங்கள் ஆன்மீக சிந்தனைகள். பரவட்டும் தங்கள் ஆன்மீகக் கருத்துக்கள்.
“சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்”
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே திருமூலர்
கு. சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
“அன்பே சிவம். மனமே குரு”
பிரம்மஸ்ரீ நித்யானந்தா ஐயா அவர்கள். பல்லாண்டு வாழ்க மக்கள் பயன்பெறுவே.
நன்றி ஆத்மவணக்கம் எல்லாம் அவன் செயல்