தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 2026

0 0
Read Time:2 Minute, 56 Second

தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 2026

யாழ்ப்பாணம் கொக்குவில் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி

பராபவ வருஷம் பிறக்கும் நேரங்கள்

  • கனடா, அமெரிக்கா: 13-04-2026 திங்கள் இரவு 11:10 PM (23:10)
  • லண்டன்: 14-04-2026 செவ்வாய் அதிகாலை 04:10 AM
  • ஐரோப்பா: 14-04-26 செவ்வாய் அதிகாலை 5:10 AM
  • இலங்கை, இந்தியா: 14-04-26 செவ்வாய் காலை 8:40 AM
  • சிங்கப்பூர், மலேசியா: 14-4- 2026 செவ்வாய் முற்பகல் 11:10 AM
  • அவுஸ்திரேலியா: 14-04-26 செவ்வாய் பிற்பகல் 01:10 PM (13:10)
  • நியூசிலாந்து: 14-04-2026 செவ்வாய் பிற்பகல் 03:10 PM (15:10)

புது வடப்பிறப்பில் பொதுவாக ஆலயங்களில் மருத்துநீர் வாங்கிவந்து வருடம் பிறக்கும் நேரம் மருத்துநீரை உடலெங்கும் பூசி நீராடி வீட்டில் வழிபாடுகள் செய்து வசதி இருப்பவர்கள் ஆலயங்களுக்குச்  சென்று வழிபட்டு வந்து பெற்றோர், பெரியோர், முதியோர் ஆகியோரிடம் ஆசி பெற்று கைவிசேடம் பரிமாறிக் கொள்வார்கள்.

கைவிசேடம்: கைவிசேடம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் போது பெரியோர்கள் இளையவர்களுக்கு அன்பளிப்பாகப் பணம் வழங்கி ஆசிர்வதிக்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். புது வடம் பிறந்து வரும் சுப நேரத்தில் கைவிசேடம் வழங்கப்படுகிறது. பணம், செல்வம் இருப்பவர்களிடம்  இருந்து புது வருடத்தில் கைவிசேடம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் கை நிறைய பணம் செல்வம் திகழும் என்பது தமிழர்களது நம்பிக்கையாகும்.

வெற்றிலையில் பழம், பூ, பாக்கு, மஞ்சள்துண்டு என்பவற்றுடன் பணம், பொன் என்பன வைத்து பரிமாறப்படுவது கைவிசேடம் எனப்படும்.

மருத்து நீர்: பொதுவாக ஆலயங்களில் மருத்து நீர் செய்யப்படும் முறை: தாழம் பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி,விஷ்ணு கிராந்தி, சீதேவியர் செங்கல நீர் ,வில்வம், அறுகு, பீர்க்கு, பால் கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவற்றினை சுத்தமான நீரிலிட்டு காய்ச்சி எடுக்கப்படும் நீர் மருத்துநீர் எனப்படும்.

கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *