பிரியாவின் கவிதைகள்

0 0
Read Time:4 Minute, 59 Second

கவிதை: கவிதை என்பது

  • கவிதை என்பது
  • கருத்தைச் சொல்லவே
  • கவிதை என்பது
  • தீமையை வெல்லவே
  • கவிதை என்பது
  • வன்முறையைச் சாய்க்கவே
  • கவிதை என்பது
  • நல்வழிக் காட்டவே .
  • ஊற்றெனச் சுரப்பதே
  • கவிதை
  • மாற்றங்கள் அளிப்பதே
  • கவிதை
  • தேற்றவும் செய்யுமே
  • கவிதை
  • தேசத்தின் உணர்வே
  • கவிதை . . . .
  • கவிதை என்பது
  • போதனை
  • கவிதை என்பது
  • சாதனை
  • கவிதை தீர்க்கும்
  • வேதனை
  • கவிதை போற்றும்
  • தேவனை .இதழ் மீது கவியெழுத
  • அதிகாலையில் விழுந்தது
  • பனித்துளி

“கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்…. உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்

கவிதை: அடிமைத்தனம்

  • எனக்கும் ஒரு நாள் வரும்..
  • கடந்த காலத்தை
  • திரும்பிப் பார்த்து..
  • இதெல்லாம்
  • எனக்குத்தானா நடந்தது.???
  • என்று நினைத்து
  • கண்ணீர் வராமல்
  • சிரிக்கும் ஒரு நாள்..!!
  • துணையாக இருப்பவர் எல்லாம்
  • விலகும் போதுதான் தெரிகிறது
  • இறைவன் மட்டுமே நிலையான
  • துணை என்பது நிரூபனமாகிறது !!!
  • சூழ்நிலை சாதகமாக இருந்தாலும்,
  • உள்ளம் மட்டும் “வேண்டாம்” என்றால்…
  • அந்த மௌனக் குரலை
  • அலட்சியப்படுத்தாதீர்கள்…!
  • சில நேரங்களில்,
  • நம் உள்ளுணர்வு சொல்லும்
  • ஒரு சிறிய எச்சரிக்கைதான்
  • நம்மை பெரிய தவறிலிருந்து காப்பாற்றும்
  • “நாளை ஆரம்பிக்கலாம்” என்பது மனம் சொல்லும் மிகவும் ஆபத்தான பொய். அந்த நாளை பலரின் வாழ்க்கையில் ஒருபோதும் வருவதில்லை.
  • கனவுகள் ஒரே நாளில் இறப்பதில்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போடப்படும் முடிவுகளில்தான் அவை அமைதியாக மறைந்து விடுகின்றன
  • யாரோ தரும்
  • நல்லவன் பட்டத்திற்கு
  • உன் சிறகை
  • நீயே வெட்டிக் கொள்ளாதே..!!
  • வானத்தை ஆளும்
  • கழுகுக்கு
  • மண்ணில் ஊர்வன சொல்லும் சான்றிதழ் தேவையில்லை..!!
  • சூழ்நிலை சாதகமாக இருந்தாலும்,
  • உள்ளம் மட்டும் “வேண்டாம்” என்றால்…
  • அந்த மௌனக் குரலை
  • அலட்சியப்படுத்தாதீர்கள்…!
  • சில நேரங்களில்,
  • நம் உள்ளுணர்வு சொல்லும்
  • ஒரு சிறிய எச்சரிக்கைதான்
  • நம்மை பெரிய தவறிலிருந்து காப்பாற்றும்…!
  • உனக்காகவென்பது
  • அன்பின் நிமித்தம்
  • உன்னாலென்பது
  • குற்றம் சுமத்தல்
  • முன்னையது பெருமை தரும்
  • பின்னையது சிறுமைப்படுத்தும்

நன்றிகள்

பிரியா பிரியதர்சினி, வவுனியா – இலங்கை

FB: Priya Priyatharsiny

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *