பிரியாவின் கவிதைகள்
Read Time:4 Minute, 59 Second
கவிதை தொகுப்பு – 01
கவிதை: கவிதை என்பது
- கவிதை என்பது
- கருத்தைச் சொல்லவே
- கவிதை என்பது
- தீமையை வெல்லவே
- கவிதை என்பது
- வன்முறையைச் சாய்க்கவே
- கவிதை என்பது
- நல்வழிக் காட்டவே .
- ஊற்றெனச் சுரப்பதே
- கவிதை
- மாற்றங்கள் அளிப்பதே
- கவிதை
- தேற்றவும் செய்யுமே
- கவிதை
- தேசத்தின் உணர்வே
- கவிதை . . . .
- கவிதை என்பது
- போதனை
- கவிதை என்பது
- சாதனை
- கவிதை தீர்க்கும்
- வேதனை
- கவிதை போற்றும்
- தேவனை .இதழ் மீது கவியெழுத
- அதிகாலையில் விழுந்தது
- பனித்துளி
“கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்…. உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்
கவிதை: அடிமைத்தனம்
- இரும்புப் பாதையில் நகர்கிறது
- இரயில் மட்டுமல்ல,
- மாறிக்கொண்டே இருக்கும்
- மனிதர்களின் வாழ்க்கையும்தான்
- தொடக்க நிலையம்…
- கனவுகளோடு ஏறும் முகங்கள்,
- கைப்பைகளில் அடைத்து வைத்த
- நாளை பற்றிய எதிர்பார்ப்புகள்.
- அடுத்தடுத்த நிறுத்தங்கள்…
- ஒவ்வொரு கதவும் திறக்கும்போது
- ஒரு புதிய கதை உள்ளே நுழைகிறது.
- யாரோ ஒருவரின் விடைபெறல்,
- இன்னொருவரின் புதிய தொடக்கம்.
- மாறும் நிலையங்கள்…
- தடங்கள் மாறும் இடத்தில்
- தடுமாறும் மனிதர்கள்.
- பாதை மாறினாலும்,
- பயணம் மட்டும் தொடர்கிறது.
- முடிவு நிலையம்…
- ஆளரவமற்ற வெற்றுப் பெட்டிகள்,
- ஆனால்,
- ஒவ்வொரு இருக்கையிலும் விட்டுச்செல்லப்பட்ட
- ஏதோ ஒரு நினைவின் சுவடுகள்.
- மெட்ரோவின் ஜன்னல் வழியே
- வேகமாய் கடக்கிறது காலம்,
- நாம் இன்னும் அடுத்த நிலையத்தைத் தேடி
கவிதை: எனக்கும் ஒரு நாள் வரும்
- எனக்கும் ஒரு நாள் வரும்..
- கடந்த காலத்தை
- திரும்பிப் பார்த்து..
- இதெல்லாம்
- எனக்குத்தானா நடந்தது.???
- என்று நினைத்து
- கண்ணீர் வராமல்
- சிரிக்கும் ஒரு நாள்..!!
- துணையாக இருப்பவர் எல்லாம்
- விலகும் போதுதான் தெரிகிறது
- இறைவன் மட்டுமே நிலையான
- துணை என்பது நிரூபனமாகிறது !!!
கவிதை: அலட்சியப்படுத்தாதீர்கள்
- சூழ்நிலை சாதகமாக இருந்தாலும்,
- உள்ளம் மட்டும் “வேண்டாம்” என்றால்…
- அந்த மௌனக் குரலை
- அலட்சியப்படுத்தாதீர்கள்…!
- சில நேரங்களில்,
- நம் உள்ளுணர்வு சொல்லும்
- ஒரு சிறிய எச்சரிக்கைதான்
- நம்மை பெரிய தவறிலிருந்து காப்பாற்றும்
கவிதை: மிகவும் ஆபத்தான பொய்.
- “நாளை ஆரம்பிக்கலாம்” என்பது மனம் சொல்லும் மிகவும் ஆபத்தான பொய். அந்த நாளை பலரின் வாழ்க்கையில் ஒருபோதும் வருவதில்லை.
- கனவுகள் ஒரே நாளில் இறப்பதில்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப்போடப்படும் முடிவுகளில்தான் அவை அமைதியாக மறைந்து விடுகின்றன
கவிதை: நல்லவன் பட்டத்திற்கு
- யாரோ தரும்
- நல்லவன் பட்டத்திற்கு
- உன் சிறகை
- நீயே வெட்டிக் கொள்ளாதே..!!
- வானத்தை ஆளும்
- கழுகுக்கு
- மண்ணில் ஊர்வன சொல்லும் சான்றிதழ் தேவையில்லை..!!
கவிதை: உள்ளுணர்வு
- சூழ்நிலை சாதகமாக இருந்தாலும்,
- உள்ளம் மட்டும் “வேண்டாம்” என்றால்…
- அந்த மௌனக் குரலை
- அலட்சியப்படுத்தாதீர்கள்…!
- சில நேரங்களில்,
- நம் உள்ளுணர்வு சொல்லும்
- ஒரு சிறிய எச்சரிக்கைதான்
- நம்மை பெரிய தவறிலிருந்து காப்பாற்றும்…!
கவிதை: பெருமை, சிறுமை
- உனக்காகவென்பது
- அன்பின் நிமித்தம்
- உன்னாலென்பது
- குற்றம் சுமத்தல்
- முன்னையது பெருமை தரும்
- பின்னையது சிறுமைப்படுத்தும்
நன்றிகள்
பிரியா பிரியதர்சினி, வவுனியா – இலங்கை
FB: Priya Priyatharsiny
